Paristamil Navigation Paristamil advert login

RN போராட்ட நிலையில்...

RN போராட்ட நிலையில்...

26 ஆவணி 2025 செவ்வாய் 14:05 | பார்வைகள் : 1505


தேசியக் பேரணிக் கட்சியான RN (Rassemblement national) அடுத்த வார திங்கள்கிழமை (செப்டம்பர் 1) மதியத்தின் பின்னர் 3:30 மணிக்கு தனது தேர்தல் பிரச்சாரக் குழுவின் கூட்டத்தைக் கூட்டுகிறது.

அரசியல் சூழ்நிலைக்கு பதிலளிக்கும் வகையில் போராட்ட நிலையில் இருத்தல் என்பதே இந்தக் கூட்டத்தின் முக்கிய பொருளாக உள்ளது.

இந்தக் கூட்த்தில் கட்சியினள் தலைவர் ஜோர்தான் பாரதெல்லா கலந்துகொண்டு பேசவுள்ளார்.

கட்சியின் ஒரு மூத்த நபர் "புதிய நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சூழ்நிலைக்கு தயாராக இருக்க வேண்டும் என்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கம்." எனத் தெரிவித்துள்ளார்

இந்த கூட்டம் செப்டம்பர் 8க்கு ஒரு வாரம் முன்னதாக நடைபெறுகிறது, அன்று பிரோன்சுவா பய்ரூ அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைய வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 8 அன்று நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு பிரெஞ்சு அரசியலில் முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஏற்கனவே அவநம்பிக்கை தீர்மானம் முன்வைக்க தயாராகி வருகின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்