ரஷ்யாவின் குரில் தீவுகளில் பெரிய நிலநடுக்கம்

26 ஆவணி 2025 செவ்வாய் 09:31 | பார்வைகள் : 489
ரஷ்யாவின் குரில் தீவுகளில் 25.08.2025 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதோடு இந்த மாதத்தில் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள நான்காவது பெரிய நிலநடுக்கமாக இந் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில காலமாகவே ரஷ்யா பிராந்தியத்தில் தொடர்ச்சியாக நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த மாதத்தில் நான்காவது முறையாக ரஷ்யாவில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. .ரஷ்யாவின் குரில் தீவுகளுக்கு அருகே இப்போது வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.3 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்
பொதுவாகப் பூகம்பம் உலகின் எந்தப் பகுதியில் எப்போது நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. நாம் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் நிலநடுக்கம் நொடிகளில் ஏற்பட்டு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் பொருளாதார இழப்புகளும் நாம் கற்பனை கூடச் செய்ய முடியாத அளவுக்கு மோசமாக இருக்கும். இதன் காரணமாகவே நிலநடுக்கம் என்றாலே மக்கள் அலறுகிறார்கள்.
இதற்கிடையே ரஷ்யாவின் குரில் தீவுகளுக்கு அருகே 6.3 ரிக்டர் அளவில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். அந்தப் பிராந்தியத்தில் கடந்த ஒரே மாதத்தில் ஏற்படும் நான்காவது வலிமையான நிலநடுக்கம் இதுவாகும். இந்த நிலநடுக்கம் 10 கி.மீ (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
பசிபிக் ரிங் ஆஃப் ஃபயரில் நிலவும் தொடர்ச்சியான நில அதிர்வுகளால் மக்கள் கவலையடைந்துள்ளனர். குரில் தீவுகளின் கிழக்கே உள்ளூர் நேரப்படி இன்று காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும், இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் அல்லது உயிர் சேதம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
ரஷ்யாவின் தூரக் கிழக்குப் பகுதியான இங்கு, சமீப வாரங்களாகத் தொடர்ந்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது.
இதனால் அப்பகுதியை ஆய்வாளர்கள் கவனமாக ஆய்வு செய்து வருகிறார்கள். முன்னதாக கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி கம்சட்கா தீபகற்பத்தில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.
அப்போது சில பகுதிகளில் தற்காலிக அவசரக்கால நிலை அறிவிக்கப்பட்டது. இருப்பினும், பெரிய கட்டமைப்பு சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை. தொடர் அதிர்வுகள் காரணமாகப் பொதுமக்கள் மட்டும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பூமிக்கு அடியில் இருக்கும் டெக்டோனிக் தட்டுகளின் (tectonic plates) இயக்கமே நிலநடுக்கத்திற்குப் பிரதானக் காரணமாக இருக்கிறது.
அதாவது நமது பூமி பார்க்க ஒரே மாதிரி தெரிந்தாலும் கூட கீழே பெரிய டெக்டோனிக் தட்டுகளைக் கொண்டிருக்கிறது.. இவை மெதுவாக நகர்ந்து கொண்டே இருக்கும். அப்போது இந்தத் தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதும்போது அல்லது விலகிச் செல்லும்போது மிகப் பெரிய அழுத்தம் மற்றும் ஆற்றல் வெளிப்படும். இதுவே வலிமையான நிலநடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இதே நிலநடுக்கம் கடலில் ஏற்படும்போது அதுவே சுனாமியாகத் தாக்குகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1