Paristamil Navigation Paristamil advert login

ரணில் தொடர்பான வழக்கு - இன்று விசாரணைக்கு

ரணில் தொடர்பான வழக்கு - இன்று விசாரணைக்கு

26 ஆவணி 2025 செவ்வாய் 06:27 | பார்வைகள் : 685


அரச நிதியை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு இன்று (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர் நோய் நிலைமை காரணமாகக் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இதன்படி, நேற்று (25) அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற வேண்டும் என அறிவித்திருந்தனர்.

இந்தநிலையிலேயே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.  

வர்த்தக‌ விளம்பரங்கள்