Paristamil Navigation Paristamil advert login

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் - பிரபல ஊடகவியலாளர்கள் உட்பட 15 பேர் பலி

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் - பிரபல ஊடகவியலாளர்கள் உட்பட 15 பேர் பலி

26 ஆவணி 2025 செவ்வாய் 03:46 | பார்வைகள் : 1843


தெற்கு காசா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், சர்வதேச ஊடகவியலாளர்கள் நால்வர் உட்பட 15 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் ரொய்டரஸ், அல்-ஜசீரா, எசோசியேற்றேர்ஸ் பிரஸ் மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி நெட்வேர்க் ஆகிய பிரபலமான ஊடக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

 

இந்தச் சம்பவம் குறித்து இஸ்ரேலிய இராணுவமோ அல்லது பிரதமரின் அலுவலகமோ இதுவரை எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்