Paristamil Navigation Paristamil advert login

Toulon நகரில்… பிரான்ஸ்-ஜேர்மன் அமைச்சரவைக் கூட்டம்!!

Toulon நகரில்… பிரான்ஸ்-ஜேர்மன் அமைச்சரவைக் கூட்டம்!!

25 ஆவணி 2025 திங்கள் 17:48 | பார்வைகள் : 3614


பிரான்ஸ்-ஜேர்மன் கூட்டு அமைச்சரவைக் கூட்டம் Toulon நகரில் இவ்வார வெள்ளிக்கிழமை இடம்பெற உள்ளது.

26 ஆவது ஆண்டு அமைச்சரவைக் கூட்டமே இந்த ஓகஸ்ட் 29 ஆம் திகதி இடம்பெற உள்ளது. இதில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், ஜேர்மனிய சான்சிலர் Friedrich Merz உட்பட 20 வரையான இருநாட்டு அமைச்சர்களும் இதில் கலந்துகொள்ள உள்ளனர். Toulon நகரில் இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

சென்ற வருடம் இந்த அமைச்சரவைக் கூட்டம் ஜேர்மனியின் Meseberg Castle  நகரில் இடம்பெற்றிருந்தது.

ஒவ்வொரு ஆண்டைப் போலவும் பொருளாதாரம் உள்ளிட்ட பல முக்கிய கலந்தாலோசிப்பு இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்