Paristamil Navigation Paristamil advert login

ஈராக்கிலுள்ள அமெரிக்க படைகளை திரும்பப் பெற முயற்சி

ஈராக்கிலுள்ள அமெரிக்க படைகளை திரும்பப் பெற முயற்சி

25 ஆவணி 2025 திங்கள் 18:26 | பார்வைகள் : 721


ஈராக்கிலிருந்து தனது படைகளை உடனடியாக திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை அமெரிக்கா துரிதப்படுத்தியுள்ளதாக அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி ஐன் அல்-அசாத் மற்றும் விக்டோரியா இராணுவ தளங்களை உடனடியாக திரும்பப் பெற அமெரிக்கா உடனடி முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க இராணுவம் ஈராக்கில் உள்ள எர்பிலுக்கும் அயல் அரபு நாடுகளுக்கும் தனது பணியாளர்களை அனுப்பத் தொடங்கியுள்ளதாக தொடர்புடைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், இந்த முடிவு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்களின்படி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் தனது சர்வதேச நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு தனது படைகளை செப்டம்பர் 2024 இல், திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்