பிரான்சை சீண்டிய அமெரிக்க தூதர்! - கண்டனம்!!
.jpg)
25 ஆவணி 2025 திங்கள் 08:03 | பார்வைகள் : 1718
பிரான்ஸ் யூத எதிர்ப்பு தாக்குதல்களை கண்டுகொள்வதில்லை என பிரான்சுக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
தூதுவர் சாள்ஸ் கஷ்னர் இந்த குற்றச்சாட்டியினை தெரிவித்ததோடு, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனையும் கடுமையாக விமர்சித்திருந்தார். ‘குறிப்பிடத்தக்க உள்ள நடவடிக்கைகளை மக்ரோன் எடுப்பதில்லை!” என அவர் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு எதிராக உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனக்குரல்களை பறக்கவிட்டுள்ளது.
பிரான்சில் ஒக்டோபர் 7, 2023 ஆம் ஆண்டின் பின்னரே யூத விரோத தாக்குதல்கள் அதிகரித்திருந்தன. அதனை கட்டுப்படுத்தும் வேலைகளை நீதித்துறை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. தூதுவரின் குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ள முடியாதது என வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக பெஞ்சமின் நெத்தன்யாஹு இதேபோன்ற ஒரு கருத்தை பிரான்ஸ் மீது வைத்திருந்தார். பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக மக்ரோன் தெரிவித்ததை அடுத்து, யூதஎதிர்ப்பு மனநிலைக்கு எண்ணை ஊற்றுகிறார் என குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புகைப்படத்தில் : அமெரிக்க தூதுவர் Charles Kushner.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1