Paristamil Navigation Paristamil advert login

சீமான் கேள்வி நியாயமானது: விஜய்க்கு பிரேமலதா!

சீமான் கேள்வி நியாயமானது: விஜய்க்கு பிரேமலதா!

25 ஆவணி 2025 திங்கள் 06:00 | பார்வைகள் : 730


உடல் நலிவுற்றிருந்தபோது அண்ணனாக தெரியாத விஜயகாந்த், மறைந்த பிறகுதான் விஜய்க்கு அண்ணனாக தெரிகிறாரா என்ற சீமானின் கேள்வி நியாயமானது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.

நிருபர்: எம்ஜிஆர்.,க்கு அடுத்தப்படியாக அண்ணன் விஜயகாந்த் என்று விஜய் கூறியுள்ளாரே, இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பிரேமலதா பதில்: அவர் அண்ணன் என்று சொன்னார். நாங்கள் தம்பி என்று சொல்லி இருக்கிறோம். அவ்வளவு தான். எது வார்த்தை சொன்னாலும் கூட்டணி என்று அர்த்தம் கிடையாது. நாங்கள் தான் சொல்லி இருக்கிறோம்.

ஜனவரி 9ம் தேதி மிகப்பெரிய மாநாடு நடத்த இருக்கிறோம். அந்த மாநாட்டில் தான் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதை உறுதியாக சொல்ல இருக்கிறோம்.

மாநாட்டில் விஜயகாந்த் பற்றி விஜய் பேசியது குறித்து சகோதரர் சீமான் சொல்லி இருக்கிறார். 'ஏன் இப்போது வாய்ஸ் கொடுக்கிறீர்கள். கட்சி ஆரம்பித்த போது, அப்போது எல்லாம் சொல்லவில்லை. உடல்நலம் சரியில்லாத போது எல்லாம் சொல்லாதவர் இப்பொழுது விஜயகாந்தை அண்ணன் விஜயகாந்த் என்று சொல்கிறார்' என்று சீமான் பேசுவதை நான் பார்த்தேன்.

உலகம் அறிந்த உண்மையை சீமான் உரக்க சொல்லி இருக்கிறார். அதுதான் உண்மை. அவர் அண்ணன் என்று சொல்கிறார். எங்களை பொறுத்தவரைக்கும் அவர் எங்களுக்கு தம்பி. இவ்வாறு பிரேமலதா கூறினார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்