Paristamil Navigation Paristamil advert login

பீட்சா கடையில் பணம் செலுத்தாமல் சென்ற பிரெஞ்சு சுற்றுலாப் பெண்கள்: உரிமையாளர் சமூக ஊடகத்தின் வழியே கண்டுபிடிப்பு!!

பீட்சா கடையில் பணம் செலுத்தாமல் சென்ற பிரெஞ்சு சுற்றுலாப் பெண்கள்: உரிமையாளர் சமூக ஊடகத்தின் வழியே கண்டுபிடிப்பு!!

24 ஆவணி 2025 ஞாயிறு 15:17 | பார்வைகள் : 2969


இத்தாலியின் சிவிடனோவா மார்கேC (itanova Marche) நகரில் உள்ள பீட்சா கடையில் இரண்டு பிரெஞ்சு பெண்கள் 44 யூரோக்கள் பில் செலுத்தாமல் வெளியே சென்றனர். 

பீட்சா கடையின் உரிமையாளர் மிக்கேலா மாலட்டினி (Michela Malatini) தனது கண்காணிப்பு கேமரா வழியாக அவர்களை பார்த்த்து Facebook-இல் ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார். பின்னர் வந்த கருத்துகள் மூலம் அவர்கள் எங்கே தங்கியிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து, இன்று காலை அவர்கள் தங்கிய இடத்திற்கே சென்று பணத்தை பெற்றுள்ளார்.

பெண்கள் பணத்தை எதுவும் பேசாமல், மன்னிப்பும் கேட்காமல் கொடுத்துவிட்டனர். மிக்கேலா இதை ஒரு பணரீதியாக பார்க்கவில்லை; இது மரியாதைக்கும் ஒழுக்கத்துக்கும் சம்பந்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இவரது நோக்கம், இத்தகைய செயலைச் செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்பதுதான்.

வர்த்தக‌ விளம்பரங்கள்