Paristamil Navigation Paristamil advert login

இது “நவீன இரத்த வரலாறு” - இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின்

இது “நவீன இரத்த வரலாறு” - இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின்

24 ஆவணி 2025 ஞாயிறு 13:01 | பார்வைகள் : 733


காசாவில் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் அறிவித்தது “முற்றிலும் பொய்” என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.

 

காசாவில் ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்ட ஒருங்கிணைந்த உணவு பாதுகாப்பு வகைப்பாடு அமைப்பு(IPC) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் காசாவில் உணவு பஞ்சத்தால் அவதியடைவதாக தெரிவித்துள்ளது.

 

அத்துடன் கிட்டத்தட்ட 6,40,000 எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் மிகப்பெரிய உணவு பஞ்சத்தை எதிர்கொள்ள இருப்பதாகவும் கணித்துள்ளது.

 

 

காசாவில் இதுவரை கிட்டத்தட்ட 114 குழந்தைகள் உட்பட 281 பேர் உணவு பஞ்சத்தால் உயிரிழந்து இருப்பதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில், காசாவில் உணவு பஞ்சம் என்ற ஐ.நாவின் அறிக்கையை “முற்றிலும் பொய்” மற்றும் “நவீன இரத்த வரலாறு” என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.

 

இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், காசா மக்களை பட்டினியில் வாட்டும் கொள்கை இஸ்ரேல் உடையது அல்ல, பட்டினியை ஒழிப்பதே இஸ்ரேலின் கொள்ளை.

 

 

சொல்லப்போனால், காசாவில் வேண்டுமென்றே பட்டினியில் கிடப்பது இஸ்ரேலிய பிணைக் கைதிகள் மட்டும் தான் என நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

 

“இரத்த வரலாறு” என்பது வரலாற்று தகவல்களின் அடிப்படையில், கிறிஸ்தவர்களை கொன்று அவர்களின் இரத்தத்தை யூதர்கள் தங்களுடைய மத சடங்குகளுக்கு பயன்படுத்துவதாக யூதர்கள் மீது கூறப்படும் பழிவாங்குதல் மற்றும் தவறான குற்றச்சாட்டாகும்.

 

யூதர்களுக்கு எதிரான இந்த புனைக்கதை, கிட்டத்தட்ட மத்திய நூற்றாண்டு தொடங்கி 20 ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பல நூற்றாண்டுகளாக பரப்பட்டு வந்துள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்