Paristamil Navigation Paristamil advert login

இங்கிலாந்து ராணுவ பயிற்சியில் தீவிபத்து...

இங்கிலாந்து ராணுவ பயிற்சியில் தீவிபத்து...

24 ஆவணி 2025 ஞாயிறு 15:01 | பார்வைகள் : 566


கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் வோல்டைகா வனப்பகுதியில் இங்கிலாந்து ராணுவம் நடத்திய பயிற்சியின் போது ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் ரூ.25 கோடி (2.3 மில்லியன் பவுண்ட்ஸ்) இழப்பீடு வழங்க இங்கிலாந்து அரசு ஒப்புக்கொண்டது.

 

அங்குள்ள ரிப்ட் பள்ளத்தாக்கில் கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்து ராணுவ பயிற்சியை நடத்திய போது ஏற்பட்ட தீ மளமளவென அருகில் உள்ள பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.

 

இதில் தனியாருக்குச் சொந்தமான சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசமாகின.

 

மேலும் பலருக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

 

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.

 

இந்தநிலையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் ரூ.25 கோடி இழப்பீடு வழங்க இங்கிலாந்து அரசாங்கம் ஒப்புக்கொண்டு உள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்