அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதலில் 18 பேர் உயிரிழப்பு
24 ஆவணி 2025 ஞாயிறு 08:38 | பார்வைகள் : 3452
தென் அமெரிக்காவிலுள்ள கொலம்பியாவில் 23-08-2025 இரு வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொலம்பியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுவினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் நேற்று அந்தியோகியா மாகாணத்தில், போதைப்பொருள் பயிர்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் ஹெலிகாப்டர் மீது கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினர்.
இதில் 12 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்ததுடன் , 8 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தின் பின்னர் காலி( cali)நகரில் உள்ள இராணுவப்பாடசாலை அருகே இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததுடன், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இத் தாக்குதல்களுக்கு, FARC கிளர்ச்சி பிரிவினரும், போதைப்பொருள் கும்பல்களும் காரணம் என கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ(Gustavo Petro) குற்றஞ்சாட்டியுள்ளார்.
இச்சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan