துணைவியைக் காக்க முயன்றரிற்குக் கத்திக்குத்து

24 ஆவணி 2025 ஞாயிறு 00:21 | பார்வைகள் : 3604
ஓகஸ்ட் 22 முதல் 23 தேதிகளுக்கு இடையிலான இரவில், ஒரு டிராம்வேயில் தனது துணைவியைப் பாதுகாக்க முயன்ற ஒருவர், பல தடவைகள் கத்தியால் குத்தித் தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பரிஸின் 14வது மாவட்டத்தில் உள்ளPorte de Vanves இல் இரவு 12:15 மணியளவில் நடந்துள்ளது.
30 வயதுடைய பாதிக்கப்பட்டவர் தனது துணைவியுடன் ட்ராமில் பயணித்துக் கொண்டிருந்தார். துணைவியார் ஒரு ஒரு CNEWS ஊடகவியலாளர் ஆவார். இவரை நீண்ட நேரம் வெறித்து பார்த்த பிறகு, ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நபர் இவரை மோதி,பின்னர் இவர்களையும் இவர்களினது குடும்பத்தினரையும் இழுத்து மிகவும் மோசமான கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
அப்போது ட்ராமில் இருந்து வெளியேறிய அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது.
திடீரென, மோசமாகத் திட்டிய ஆபிரிக்க வம்சாவனியினன், ஒரு கத்தியை உருவி, ஏழு முறை குத்தியுள்ளார். இதில் ஆறு முறை நெஞ்சிலும், ஒரு முறை மணிக்கட்டிலும் குத்தப்பட்டார். பின்னர் தாக்கியவர் 15வது மாவட்டத்தை நோக்கி தப்பித்தார்.
அவசர மருத்துவ சேவையான SAMU குழு சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டது. 30 வயதுடைய தாக்கப்பட்டவர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், தற்போது உயிருக்கான ஆபத்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்கிய குற்றவாளி குறித்து, காவற்துறையின் கூற்றுப்படி 1983 இல் பிறந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. காற்துறையின் தேடல்கள் மூலம் செனகல் வம்சாவளியைச் சேர்ந்த இந்த நபரின் இரத்தத் தடயங்கள் தடயவியற்துறையினரால் கைப்பற்றப்பபட்டதோடு சாட்சிகளாலும் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணை நிலையில், தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கத்தி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, பரிஸ் நீதிமன்றம் "வேண்டுமென்றே செய்த கொலை முயற்சி" குற்றத்திற்கான வழக்கைத் தொடங்கியுள்ளது. விசாணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1