செப்டம்பர் 10 - ஜோன்-லுக்-மெலோன்சோன் பொதுவுடமை வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு

23 ஆவணி 2025 சனி 10:46 | பார்வைகள் : 1375
LFI (La France insoumise) இயக்கத்தின் நிறுவனர் ஜோன்-லுக்-மெலோன்சோன், Drôme மாவட்டத்தின் Châteauneuf-sur-Isère இல் நடைபெற்ற கோடைகால மாநாட்டில் உரையாற்றியபோது, செப்டம்பர் 10 ஆம் தேதி 'பொதுவுடமை வேலைநிறுத்தம்' நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.
ஜோன்-லுக்-மெலோன்சோன் மீண்டும் செப்டம்பர் 10 அன்று நடைபெறவிருக்கும் முடக்க நடவடிக்கையை வரவேற்று, 'மக்களின்' கோபத்தின் குடியுரிமை வெளிப்பாடாக இது அமைய வேண்டும் என எதிர்பார்த்தார். அதேநேரம் 'பொதுவுடமை வேலைநிறுத்தத்துக்கும்' அழைப்பு விடுத்தார்.
'செப்டம்பர் 10 ஒரு பொது முடக்க நாளாக இருக்க வேண்டும், அதாவது, ஊதியப் பணியாளர்களைப் பொறுத்தவரை, செப்டம்பர் 10 பொதுவுடமை வேலைநிறுத்த நாளாக இருக்க வேண்டும்' என்று அவர் மாநாட்டில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் அறிவித்தார்.
'நிச்சயமாக இதை நான் தீர்மானிப்பது இல்லை, செப்டம்பர் 23 அன்று, பிரான்சுவா பைரூ அரசை வீழ்த்துவதற்காக நாம் அவநம்பிக்கை தீர்மானத்தை சமர்ப்பிப்போம்' என்று கூறியதன் மூலம் ஒரு பொதுவுடமை வேலைநிறுத்தம் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
2026 நிதிச் சட்ட திட்டத்திற்காக தற்போது விமர்சிக்கப்படும் பிரதமரை தேசிய சட்டமன்றத்தில் வீழ்த்த டுகுஐ உண்மையில் நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த நிதிச் சட்ட திட்டம் இலையுதிர்காலத்தில் விவாதிக்கப்படும்.
'இவை அனைத்தும் எவ்வாறு தொடங்கப்பட்டது என யாருக்கும் தெரியாது, ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் தொடக்கத்திலிருந்தே இதில் சேர்ந்துள்ளனர்;. குடிமக்கள் சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன, மேலும் பல உருவாக்கப்படும்' என்று செப்டம்பர் 10 பற்றி ஜோன்-லுக்-மெலோன்சோன் கூறினார்.
'எங்கள் உத்தி இயக்கத்திற்கு உதவுவதும் சேவை செய்வதும் ஆகும்' என்று ஜோன்-லுக்-மெலோன்சோன் அறிவித்தார், அரசியல் சுயநலம் குறித்த எந்தவொரு குற்றச்சாட்டையும் நிராகரித்தார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1