இந்த வார இறுதியில் தவிர்க்க வேண்டிய சாலைகள்!

22 ஆவணி 2025 வெள்ளி 11:58 | பார்வைகள் : 1301
இந்த வார இறுதியில் பிரான்சின் சாலைகளில் போக்குவரத்து மிகவும் அடர்த்தியாக இருக்கும். விடுமுறையில் இருந்து திரும்பும் போக்குவரத்து திசையில், Bison Futé இந்த வெள்ளிக்கிழமை முதல் பல நெடுஞ்சாலைகள் மற்றும் பிராந்தியங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடைகால விடுமுறையில் இருந்து திரும்புவோர் மீண்டும் பொறுமையாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பலர் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பிப்பார்கள். ஓகஸ்ட் 22 (வெள்ளி), 23 (சனி) மற்றும் 24 (ஞாயிறு) ஆகிய நாட்களில் பிரான்சில் போக்குவரத்து நெரிசல் குறித்து கணிப்புகள் மோசமாகவே உள்ளன.
வெள்ளிக்கிழமை, விடுமுறையில் இருந்து திரும்பும் திசையில், "முழு நாட்டிலும் போக்குவரத்து அடர்த்தியாக இருக்கும்" என்று Bison Futé தெரிவிக்கிறது.
குறிப்பாக, "தென்மேற்கு குதியில் (A63, A10) மற்றும் Auvergne-Rhône-Alpes பிராந்தியத்தில் A7 மற்றும் இத்தாலியில் இருந்து Mont-Blanc சுரங்கப்பாதை வரை மிக முக்கியமான போக்குவரத்து சிரமங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன". இந்த நெருக்கடி காலை பத்து மணி முதல் மாலை வரை நீடிக்கும் என்று தேசிய சாலை தகவல் மையம் தெரிவிக்கிறது.
Île-de-France இல், விடுமுறையில் இருந்து திரும்புவதால் ஏற்படும் போக்குவரத்து தாமதங்கள் மதியத்தில் A10 மற்றும் பின்னர் A6 இல் உணரப்படும். மாலை நேரத்தில் முழு சாலை வலையமைப்பின் போக்குவரத்தும் கடினமாக இருக்கும், இது விடுமுறையில் இருந்து திரும்புவோர் மற்றும் Île-de-France மக்களின் தினசரி பயணங்களை இணைக்கும்.
சிவப்பு மற்றும் கருப்பு நிற சனிக்கிழமை
பிரான்சின் தேசிய அளவில், சனிக்கிழமை போக்குவரத்து விடயத்தில் மிக மோசமான நாளாக இருக்கும். புறப்படும் திசையில், நாட்டின் தென்கிழக்கு பகுதி மட்டுமே சில தாமதங்களால் பாதிக்கப்படும். திரும்பும் திசையில், எந்த விதிவிலக்கும் இல்லாமல், அனைத்து பகுதிகளும் "மிகவும் கடினமான" போக்குவரத்தால் பாதிக்கப்படும். சிலகருப்பு எச்சரிக்கையில் உள்ளன, இது "அதிகபட்ச கடினமான" போக்குவரத்தை குறிக்கும்
போக்குவரத்தின் இந்த அதிகபட்ச நிலை. சிரமத்தால் பாதிக்கப்பட்ட பதினொரு நெடுஞ்சாலைகள் நாட்டின் தென்கிழக்கில், மத்தியதரைக்கடல் (மெதித்தரானிய) வளைவு" பகுதியில் அமைந்துள்ளன. "அத்லாண்டிக் கடற்கரையில் இருந்து A63, A10, A87, A11 மற்றும் மெதித்தரானிய கடற்கரையில் இருந்து A7, A8, A9, A61 வரும் சாலைகள், அத்துடன் நாட்டின் மையத்தை கடந்து செல்லும் சாலைகள் A75, A71, A20 ஆகியவை மிக அதிகமான பெரும் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என்று Bison Futé முன்னறிவிக்கிறது.
பிராந்தியங்களைப் பொறுத்து, காலையின் தொடக்கம் முதல் மாலை வரை போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று பகுப்பாய்வாளர்கள் கணிக்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை மென்மையான போக்குவரத்து எதிர்பார்க்கப்படுகிறது
"விடுமுறையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஓகஸ்ட் 24) திரும்புவது நல்லது. உண்மையில், போக்குவரத்து மென்மையாக இல்லாவிட்டாலும், முந்தைய நாளை விட மோசமாக இருக்காது, அனைத்து பிரெஞ்சு நெடுஞ்சாலைகளிலும் செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும், இது 'கடினமான' போக்குவரத்தைக் குறிக்கும்."
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1