Paristamil Navigation Paristamil advert login

பாரிய தீ! - குழந்தை பலி.. மேலும் இருவர் உயிருக்கு போராட்டம்!!

பாரிய தீ! - குழந்தை பலி.. மேலும் இருவர் உயிருக்கு போராட்டம்!!

22 ஆவணி 2025 வெள்ளி 10:35 | பார்வைகள் : 931


நேற்று ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை பிற்பகல் Villeneuve-la-Garenne (Hauts-de-Seine) நகரில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தில், மூன்று வயதுடைய சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான். அவரது சகோதரன் மற்றும் தாய் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ பரவியமைக்குரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.  தீபரவிய வீட்டுக்கு அருகில் இருந்து தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டதை அடுத்து, 70 வரையான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வீட்டுக்குள் இரு பிள்ளைகளை சுமந்தபடி பெண் ஒருவர் சுயநினைவின்றி கிடந்துள்ளார். அவர்கள் மூவரும் மீட்கப்பட்டனர்.

அதை அடுத்து, மூவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாலை 7 மணி அளவில் 3 வயதுடைய ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்