Paristamil Navigation Paristamil advert login

கீர்த்தி சுரேஷுக்கு வில்லனாகும் மிஷ்கின்?

கீர்த்தி சுரேஷுக்கு வில்லனாகும் மிஷ்கின்?

21 ஆவணி 2025 வியாழன் 15:44 | பார்வைகள் : 1190


தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு திரைமொழியை உருவாக்கி தொடர்ந்து அந்த பாணியிலேயேப் படங்களை இயக்கி வருபவர் மிஷ்கின். கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான ‘சைக்கோ’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெறாததால் ஆறு ஆண்டுகளாகியும் அவரது அடுத்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை.

இதற்கிடையில் அவர் ‘பிசாசு 2’ மற்றும் ‘ட்ரெய்ன்’ ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இரு படங்களும் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. இந்த இடைபட்ட காலத்தில் மிஷ்கின் நடிகராகவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவரது நடிப்புக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்து வருகிறது.

இதனால் அவர் தொடர்ந்து நடிக்கவும் செய்கிறார். அந்தவகையில் அடுத்து கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் படம் ஒன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை டிரம்ஸ்டிக் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், விரைவில் இயக்குனர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்