Paristamil Navigation Paristamil advert login

போதைப்பொருள் எதிர்ப்பு போர்!

போதைப்பொருள் எதிர்ப்பு போர்!

21 ஆவணி 2025 வியாழன் 14:17 | பார்வைகள் : 3135


மார்ட்தினிக் மற்றும் குவாதிலூப் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அரசாங்க நடவடிக்கையை கடுமையாக்க புரூனோ ரத்தையோ உள்துறை அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தையோ இன்று வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை முதலில் மார்ட்தினிக்கில், பின்னர் குவாதிலூப்பில் எதிர்பார்க்கப்படுகிறார். போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக கடல் கடந்த நிலப்பகுதிகளுக்கு இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது, இது உள்துறை அமைச்சககத்தின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும்.

கடல் கடந்த சில பிரதேசங்களில் போதைப்பொருள் பரவல் அதிகரிப்பை எதிர்கொண்டு, புரூனோ ரத்தையோ அதிரடி நடவடிக்கையை வலியுறுத்துகிறார். இதன் காரணமாக, உள்துறை அமைச்சர் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை மார்ட்டினிக் மற்றும் குவாதிலூப் செல்கின்றார்.

தனது பயணத்தின் போது, உள்துறை அமைச்சர் இந்த கடல் கடந்த பிரதேசங்களில் குற்றங்களின் அதிகரிப்பை மதிப்பீடு செய்யவும், உள்ளூர் தரப்பினருடன் செயல்பாட்டு உரையாடலில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார்.

இந்த இரண்டு பிரதேசங்களிலும், போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் ஆயுதங்களும் பரவலாக பயன்கடுத்தப்படும் நிலை அதிகாரிகளை அச்சுறுத்துகிறது.விமான நிலையங்களில் முறையான சோதனைகளை அமல்படுத்துதல், துறைமுகங்களில், ஊடுருவிப்hபர்வைக் கருவிகள், ட்ரோன்கள் மற்றும் ராடார்களின் அதிகரித்த பயன்பாடு, மற்றும் ஜோந்தாமேரியின் மேலதிக நடவடிக்கை, நடவடிக்கைகள் இந்தத் திட்டத்தில் அடங்கும்.

2025-இன் முதல் ஆறு மாதங்களில், பிரான்ஸ் நிலப்பரப்பு மற்றும் கடல் கடந்த நிலப்பகுதிகளில் 37.5 தொன் கொக்கெய்னை பறிமுதல் செய்துள்ளனர் காவல்துறையினர். இது 2024-ஐ விட 45சதவீதம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் ஜூலை 15 அன்று, மார்ட்தினிக் தீவுக்கு அருகில் 5 தொன் கொக்கெய்ன் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்