10 ஆண்டுகளுக்கு முன் வீரச் செயலால் பெரும் இரத்தக் களரி தவிர்க்கப்பட்டது

21 ஆவணி 2025 வியாழன் 13:17 | பார்வைகள் : 3875
2015 ஆகஸ்ட் 21 அன்று, அதாவது சரியாகப் பத்து வருடங்களின் முன்னர், மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த அயூப் எல்-கசானி (Ayoub El Khazzani) என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்போடு தொடர்புடைய நபர், ஆர்ம்ஸ்டர்டாம் - பரிஸ் இடையே பயணித்த Thalys தொடருந்தில் துப்பாக்கிச்சூடு நடாத்தினான். அப்போது தொடருந்தில் இருந்த 554 பயணிகளின் உயிர்கள் ஆபத்தில் சிக்கியது. ஆனால், ஏழு பயணிகளின் வீரச் செயல் காரணமாக பெரும் பேரழிவு தவிர்க்கப்பட்டது.
Thalys 9364 தொடருந்து, Amsterdam–இல் இருந்து பரிஸ் நோக்கிச் சென்றபோது, மாலை 5.50 மணியளவில் Bruxelles-Midi நிலையத்தை அடைந்தது. அப்போது அயூப் எல்-கசானி, AK47 துப்பாக்கி,பல ரவை நரம்பிய மாற்றுக் கூடுகள், Luger கைத்துப்பாக்கி, வெட்டுக் கத்திகள், எரிவாயுவால் நிரப்பப்பட்ட வெடிக்கும் குடுவைகளுடன் தொடருந்தில் துப்பாக்கிச்சூடு தொடங்கினார்.
முதலில் 28 வயது பிரெஞ்சு பயணி ஒருவர் தாக்குதலாளியை ஆயுதம் இழக்கச் செய்ய முயன்றார். பின்னர் 51 வயதான Mark Moogalian (பிரெஞ்சு - அமெரிக்கன்) உதவி செய்து, அவரது துப்பாக்கியைப் பறித்தார். ஆனால் El Khazzani பிஸ்தலை எடுத்துச் சுட, Moogalian முதுகில் காயமடைந்தார்.
El Khazzani மீண்டும் தொடருந்து பிரிவு 12-க்கு சென்று பயணிகளை நோக்கிச் சுட முயன்றார். ஆனால், அவரது ஆயுதம் செயலிழந்தது. அதன்போது அமெரிக்க பயணிகள் Alek Skarlatos (Garde nationale), Spencer Stone (US Air Force), மற்றும் அவர்களது நண்பர் Anthony Sadler ஆகியோர் உடலால் தாக்கி அவரை கட்டுப்படுத்தினர்.
Stone கடுமையாகக் குத்தப்பட்டபோதிலும், Chris Norman (பிரித்தானியர்) மற்றும் ஓய்வில் இருந்த பிரெஞ்சு தொடருந்து சேவை பணியாளர் உதவியுடன் தாக்குதலாளி முற்றிலும் முடக்கப்பட்டான்.
Daesh திட்டமிட்ட தாக்குதல்
மொத்தத்தில் மூவர் மட்டுமே காயமடைந்தனர் — இது ஒரு அதிசயம் எனக் கருதப்பட்டது. பின்னர் தொடருந்து Arras (Pas-de-Calais) நோக்கி திருப்பப்பட்டது. அங்கு El Khazzani உடனடியாக கைது செய்யப்பட்டான்.

பரிஸ் பயங்கரவாத தடைப் பிரிவு நடத்திய விசாரணையில், தாக்குதல் ஐ.எஸ். அமைப்பு (Daesh) மூலம் திட்டமிடப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
El Khazzani மீது கொலை முயற்சி, பயங்கரவாதக் குழுவுடன் தொடர்பு சட்டவிரோத ஆயுதக் கைப்பற்றல், படுகொலைத் தாக்குதல், போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 2020 டிசம்பர் 17 அன்று பரிஸ் விசேடநீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது.
முதல் நீதிமன்றத் தீர்ப்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதே தண்டனை 2022 டிசம்பர் 8 அன்று மேல்முறையீட்டிலும் உறுதிசெய்யப்பட்டது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1