இதுவரை 80,000 பேர் நீந்திய சென் நதி!!

21 ஆவணி 2025 வியாழன் 12:51 | பார்வைகள் : 3039
சென் நதியில் நீச்சல் தடாகம் அமைக்கப்பட்டு, நீந்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை அறிந்ததே. ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை 80,000 இற்கும் அதிகமானோர் நீந்தியுள்ளனர்.
Bras Marie (4 ஆம் வட்டாரம்), Grenelle (15 ஆம் வட்டாரம்) மற்றும் Bercy (12 ஆம் வட்டாரம்) போன்ற மூன்று இடங்களில் சென் நதியில் நீந்துவதற்கு தடாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜூலை 5 ஆம் திகதி அவை திறக்கப்பட்டதில் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை தந்தவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், ஜூலை 5 ஆம் திகதியில் இருந்து ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரையான 45 நாட்களில் 80,000 இற்கும் அதிகமானோர் சென் நதியில் பாதுகாப்பாக நீந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மழை பெய்யும் போது நீர் மாசடைவதாகவும், மீண்டும் சுத்திகரிக்கப்பட்டு அதன் பின்னர் நீந்துவதற்கு அனுமதிக்கப்படுவதாகவும், அவ்வாறாக இந்த 45 நாட்களில் ஐந்துக்கும் மேற்பட்ட நாட்கள் மூடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1