பாறை உருண்டு விழுந்து இருவர் பலி! - ஒருவர் படுகாயம்!!

21 ஆவணி 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 2921
பாறை உருண்டு விழுந்ததில் இருவர் பலியான சம்பவம் Haute-Savoie மாவட்டத்தின் RN 205 நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளது.
Chamonix-Passy நோக்கிச் செல்லும் வீதியில் நேற்று புதன்கிழமை பயணித்துக்கொண்டிருந்த மகிழுந்து ஒன்றின் மீது, திடீரென பாரிய எடையுள்ள கற்பாறை ஒன்று விழுந்து மகிழுந்தை நொருக்கியது. இதில் மகிழுந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த - 2002 ஆம் ஆண்டில் பிறந்த தம்பதியினர் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 54 வயதுடைய சாரதி படுகாயமடைந்தும், முன் இருக்கையில் அமர்ந்திருந்த அவருடைய மனைவி இலேசான காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு இரவு 10.30 மணி வரை இத்தாலியில் இருந்து பிரான்சுக்குள் நுழையும் Mont Blanc சுரங்கத்தில் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1