Paristamil Navigation Paristamil advert login

போலந்தில் விழுந்த ரஷ்ய ட்ரோன் - வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்திய முக்கிய தகவல்

போலந்தில் விழுந்த ரஷ்ய ட்ரோன் - வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்திய முக்கிய தகவல்

21 ஆவணி 2025 வியாழன் 04:09 | பார்வைகள் : 973


போலந்து நாட்டில் ரஷ்ய ட்ரோன் விமானம் ஒன்று விழுந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதன்கிழமை அதிகாலை ரஷ்ய ட்ரோன் விமானம் ஒன்று போலந்து நாட்டின் சோள வயலில் விழுந்து வெடித்து சிதறி இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் வ்லாடிஸ்லா கோசினிஅக்-காமிய்ஸ் தெரிவித்துள்ளார்.

அதிகாலை 2 மணியளவில் போலந்தின் ஓசினி கிராமத்திற்கு அருகே இந்த ரஷ்ய ட்ரோன் விழுந்ததாக உள்ளூர் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், ரஷ்ய ட்ரோனின் எரிந்த பாகங்கள் மற்றும் உலோக சிதறல்களை கண்டனர்.

ரஷ்ய ட்ரோன் விழுந்த காரணத்தினால் அருகிலுள்ள வீடுகளின் ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியுள்ளன, ஆனால் அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் காயமடையவில்லை.

போலந்தில் விழுந்த இந்த ரஷ்ய ட்ரோன் ஆனது, ஈரானின் ஷாஹெட் ட்ரோனின் ரஷ்ய வடிவமைப்பாகும் என வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்