Paristamil Navigation Paristamil advert login

டிரம்பின் வரி அச்சுறுத்தல் இந்தியா உடனான உறவை பலவீனப்படுத்தாது; ரஷ்யா திட்டவட்டம்

டிரம்பின் வரி அச்சுறுத்தல் இந்தியா உடனான உறவை பலவீனப்படுத்தாது; ரஷ்யா திட்டவட்டம்

21 ஆவணி 2025 வியாழன் 09:21 | பார்வைகள் : 1124


டிரம்பின் வரி அச்சுறுத்தல், பொருளாதார தடைகள் இந்தியா உடனான எங்களது உறவை பலவீனப்படுத்தாது' என ரஷ்ய தூதர் ரோமன் பாபுஷ்கின் தெரிவித்தார்.

இது குறித்து இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் ரோமன் பாபுஷ்கின் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டி: டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள், தடைகளைப் பொறுத்தவரை, எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். போட்டித் தடைகள் என்ற இந்த சட்டவிரோத கருவியை நாங்கள் முற்றிலும் எதிர்க்கிறோம். ஒருதலைபட்சத் தடைகள், சட்டவிரோதமானவை என்று நான் சொல்கிறேன்.

அழுத்தம்

ஆனால் ரஷ்யாவிற்கு எதிராக பல தடைகள் விதிக்கப்பட்ட போதிலும், எங்கள் வளர்ச்சி மேலும் அதிகரிப்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். எனவே, எங்களுக்கு எவ்வளவு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு எரிசக்தி உட்பட அனைத்து துறைகளிலும் எங்கள் கூட்டாண்மையை விரிவுபடுத்த அதிக வாய்ப்புகள் கிடைப்பதாகத் தெரிகிறது.

இந்தியாவுடன் எங்கள் கூட்டாண்மை தொடரும். மேலும் அது வளரும் என்பதில் நாங்கள் முற்றிலும் நம்பிக்கை கொண்டு உள்ளோம்.

இடையூறு ஏற்பட்டாலும்...!

இந்த ஆண்டு இறுதிக்குள் அதிபர் புடினின் இந்திய பயணம் முக்கியமானதாக இருக்கும். எனவே, உறவுகளின் போக்கைப் பற்றி நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். புதிய சூழ்நிலைகள் காரணமாக ஒரு சிறிய இடையூறு ஏற்பட்டாலும், அதைச் சமாளிப்பதற்கான வழிகளை நாங்கள் நிச்சயமாகக் கண்டுபிடிப்போம். இவ்வாறு ரஷ்ய தூதர் ரோமன் பாபுஷ்கின் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்