Paristamil Navigation Paristamil advert login

மகிழுந்து தரிப்பிட குற்றப்பின்னணியில் சிக்கிய - 36 கிலோ கஞ்சா!!

மகிழுந்து தரிப்பிட குற்றப்பின்னணியில் சிக்கிய - 36 கிலோ கஞ்சா!!

20 ஆவணி 2025 புதன் 18:05 | பார்வைகள் : 4294


 

மகிழுந்து சாரதி ஒருவர் தரிப்பிட அனுமதி இல்லாத இடம் ஒன்றில் அவரது மகிழுந்தை நிறுத்த முற்பட்டதை அடுத்து, அவர் மகிழுந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 36 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது.

Pavillons-sous-Bois (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் நேற்று ஓகஸ்ட் 19, செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இரவு 8 மணி அளவில், Allée Jules-Auffret பகுதியில் மகிழுந்து நிறுத்தப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் குறித்த மகிழுந்தை நெருங்கினர். அப்பகுதியில் குறித்த மகிழுந்தை நிறுத்த அனுமதி இல்லை என்பதால், அவரை விசாரிக்கும் நோக்கோடு அவர்கள் நெருங்கியுள்ளனர்.

ஆனால், அங்கு இடம்பெற்றதோ எதிர்பாராத நிகழ்வு. மகிழுந்து சாரதியின் முன்னுக்கு பின் முரணான பதிலில் அவர் மீது சந்தேகம் எழுந்து, அவரது மகிழுந்து சோதனையிடப்பட்டது.

அதில், அவரது மகிழுந்தில் 36 கிலோ எடையுள்ள கஞ்சா மறைத்து வைத்து எடுத்துச் செல்லப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. குறித்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்