Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்

20 ஆவணி 2025 புதன் 17:32 | பார்வைகள் : 1177


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

50 வயது நதாலி ரோஸ் ஜோன்ஸ் என்ற பெண், ஆகஸ்ட் 6ம் திகதியன்று தன்னுடைய பேஸ்புக் சமூக ஊடக பக்கத்தில், “ FBI அதிகாரிகளிடம் ட்ரம்ப்பை POTUS என குறிப்பிட்டு கொலை செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அத்துடன் ஆகஸ்ட் 14ஆம் திகதி அன்று மற்றொரு பதிவில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்திடம் அமெரிக்க ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கான விழாவை ஏற்பாடு செய்யுமாறும், அவர் பயங்கரவாதி என்றும் ரோஸ் ஜோன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து அமெரிக்காவின் ரகசிய சேவை நடத்திய விசாரணையில் ரோஸ் ஜோன்ஸ் தான் தெரிவித்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் ரோஸ் ஜோன்ஸ் மீது அமெரிக்க ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தது மற்றும் பணம் கேட்டு மிரட்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்