Paristamil Navigation Paristamil advert login

யாழ். பாடசாலைக்கு நாளைய தினம் விசேட விடுமுறை

யாழ். பாடசாலைக்கு நாளைய தினம் விசேட விடுமுறை

20 ஆவணி 2025 புதன் 12:57 | பார்வைகள் : 672


யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நாளை வியாழக்கிழமை (21) அன்று வழங்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களான  ப.பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் புதன்கிழமை அன்று  பிரதமர் ஹரிணி அமரசூரியவை  நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும் குறித்த நிகழ்வில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இதன் பிரகாரம், உடனடியாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு நாளைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமர் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்