இலங்கை தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
20 ஆவணி 2025 புதன் 11:57 | பார்வைகள் : 7302
இலங்கையில் உள்ள அனைத்து தபாலகங்கள் மற்றும் உப தபால் அலுவலக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு ஆதரவாக நுவரெலியா தபால் ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நுவரெலியா பிரதான தபால் நிலையம் முழுமையாக செயலிழந்து காணப்படுகின்றது.
இதனால் நுவரெலியாவிற்கு வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தினை முழுமையாக பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர் .
தொல்பொருள் நினைவுச்சின்னமாகக் கருதப்படும் நுவரெலியா தபால் நிலையம் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் நுவரெலியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த தபால் நிலையத்தைத் தவறாமல் பார்வையிட்டுச் செல்வார்கள். இதன் கட்டிடக்கலை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் காரணமாக இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தளமாக உள்ளது. எனினும் நாட்டில் முன்னெடுக்கப்படும் தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாட்டிலிருந்து வந்துள்ள பெருமளவு சுற்றுலாப் பயணிகள் பழமையான இத்தபால் நிலையத்தைப் பார்வையிட முடியாமல் இருப்பதால் கடும் அதிருப்தியை வெளியிடுகின்றனர்.
தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு, நிர்வாக அலுவலகம் மற்றும் கணக்காய்வு அலுவலகங்களில் ஊழியர்களின் பணியை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் வெளியேறும் நேரம் என்பவற்றை கைவிரல் அடையாள இயந்திரங்களில் பதிய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan