Paristamil Navigation Paristamil advert login

மது விளம்பரங்களுக்கு தடை உத்தரவிட்ட பிரான்ஸ் நீதிமன்றம்!!

மது விளம்பரங்களுக்கு  தடை உத்தரவிட்ட பிரான்ஸ் நீதிமன்றம்!!

19 ஆவணி 2025 செவ்வாய் 16:07 | பார்வைகள் : 1681


பிரான்ஸ் நீதிமன்றம், மதுவை விளம்பரமாக்கும் 13 பிரபலர்களின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பதிவுகளை மெட்டா நிறுவனம் மூலம் நீக்க உத்தரவிட்டுள்ளது. 

இந்த பதிவுகளில் சமையல் கலைஞர் ஜுவான் ஆர்பேலாஎஸ் (Juan Arbelaez) மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் மாலிகா மேனார்ட் (Malika Ménard) உள்ளிட்டோர் இருந்தனர். நீதிமன்றம் இந்த பதிவுகள் பிரான்சில் காட்டப்படக்கூடாது என்றும், இந்த பதிவுகளை வெளியிட்டவர்களின் அடையாள விவரங்களை Addictions France அமைப்புக்கு வழங்குமாறும் மெட்டாவுக்கு உத்தரவிட்டது.

பிரான்சில் மதுவுக்கான விளம்பரங்கள் கடுமையான சட்டக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை. ஆனால், பிரபலங்கள் விழாக்கள் மற்றும் நகைச்சுவையுடன் மது பாட்டில்களுடன் புகைப்படங்களை பகிர்வது, சட்டத்தை தவிர்த்து விளம்பரமிடும் ஒரு வழியாக பார்க்கப்படுகிறது. 

2023 ஆம் ஆண்டிலும் இதேபோன்ற வழக்கில் வெற்றி பெற்ற Addictions France, இப்போது புதிய தீர்ப்பின் மூலம் மதுவை விளம்பரப்படுத்தும் சமூக ஊடக உளறல்களுக்கு எதிராகப் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்