Paristamil Navigation Paristamil advert login

மாற்றுத்திறனாளிச் சிறுமி நீரில் மூழ்கி பலி!!

மாற்றுத்திறனாளிச் சிறுமி நீரில் மூழ்கி பலி!!

18 ஆவணி 2025 திங்கள் 08:00 | பார்வைகள் : 2066


 

11 வயதுடைய மாற்றுத்திறனாளிச் சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் Grande-Paroisse (Seine-et-Marne) நகரில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள பிரபலமான நீர் விளையாட்டு மையமான ‘Wam Park Fontainebleau’ இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  Arpajon (Essonne) நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள், பதினொரு ஆசிரியர்கள் கொண்ட குழு ஒன்று ஓகஸ்ட் 17, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அங்கு வருகை தந்துள்ளது.

அவர்கள் நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டிருந்தபோது, சிறுமி ஒருவரைக் காணவில்லை என ஆசிரியர் எச்சரித்துள்ளார். அதை அடுத்து, உயிர்காக்கும் படை வீரர்கள் விரைவாக நீரில் குதித்து குறித்த சிறுமியை தேடி, நீரில் இருந்து மீட்டனர். ஆனால் துரதிஷ்ட்டவசமாக சிறுமியின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு உளநல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்