Paristamil Navigation Paristamil advert login

பசுமை மாற்றம் தாமதத்தில் – பிரான்சுக்கு கணக்காய்வுத் துறையின் கடும் எச்சரிக்கை!!

பசுமை மாற்றம் தாமதத்தில் – பிரான்சுக்கு கணக்காய்வுத் துறையின் கடும் எச்சரிக்கை!!

16 புரட்டாசி 2025 செவ்வாய் 22:15 | பார்வைகள் : 1799


பசுமை மாற்ற நடவடிக்கைகளில் பிரான்ஸ் பின்னடைந்துள்ளதாகக் குறிப்பிட்டு, உடனடியான நடவடிக்கை அவசியம் என கணக்காய்வுத் துறை தனது முதல் வருடாந்திர அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. “பசுமை மாற்றத்திற்கான முதலீடு, செயலின்றி இருப்பதால் ஏற்படும் இழப்புகள்  மிகக் குறைவு,” எனவும், ஆனால் தொடர்ந்து தாமதிக்கும் பட்சத்தில் செலவினச் சுமை பலமடங்கு உயரும் எனவும் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டிற்குள் 55 சதவீத கார்பன் உமிழ்வைக் குறைக்கும் இலக்கும், 2050ஆம் ஆண்டுக்குள் பூஜ்ய கார்பன் நிலையை அடையும் நோக்கும் தற்போது மேற்கொள்ளப்படும் முயற்சிகளால் சாத்தியமில்லை எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் சீர்கேடு, உயிரியல் பல்வகைமையின் வீழ்ச்சி மற்றும் மாசு அதிகரிப்பு போன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்க பிரான்ஸ் அரசு துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் துறை சார்ந்து வலியுறுத்துகின்றது.

வர்த்தக‌ விளம்பரங்கள்