ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் விசா கட்டுப்பாடுகள்
16 புரட்டாசி 2025 செவ்வாய் 19:42 | பார்வைகள் : 2761
ஆண்டொன்றிற்கு பல்லாயிரக்கணக்கான ரஷ்யர்கள் ஐரோப்பாவுக்கு பயணிக்கிறார்கள். அதற்கு முட்டுக்கட்டை போட ஐரோப்பிய ஒன்றியம் தயாராகிவருகிறது.
இந்த ஆண்டின் இறுதி முதல், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிரி நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்க ஐரோப்பிய ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் சில ரஷ்யாவுக்கு விசா கட்டுப்பாடுகள் விதிக்க பல ஆண்டுகளாகவே ஐரோப்பிய ஆணையத்தை வற்புறுத்திவருகின்றன.
ஆகவே, டிசம்பர் வாக்கில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு சுற்றுலா வரும் ரஷ்யர்களுக்கு கட்டுப்பாடுகள் சிலவற்றை விதிக்க ஐரோப்பிய ஆணையம் திட்டமிட்டுவருகிறது.
ஆனால், ரஷ்ய மக்கள் அமைப்புகளைச் சேர்ந்த சில உறுப்பினர்கள், ரஷ்யர்களுக்கு வழங்கப்படும் சுற்றுலா விசாக்களை ஆயுதமாக பயன்படுத்துவதற்கெதிராக எச்சரித்துள்ளார்கள்.
குறிப்பாக, புடின் விமர்சகரான அலெக்ஸி நவல்னியின் மனைவியாகிய யுலியா நவல்நாயா, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைகள் தலைவரான காஜா கல்லாஸுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், புடின் ஆதரவு செல்வந்தர்கள், அரசு பிரச்சாரகர்கள் போன்றவர்களை மட்டும் குறிவைத்து கட்டுப்பாடுகள் விதிக்குமாறும், சாதாரண பொதுமக்கள் விடயத்தில் வித்தியாசம் காட்டுமாறும் கோரியுள்ளார்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan