Histoire naturelle அருங்காட்சியகத்தில் 6 லட்சம் யூரோ க்கள் மதிப்புள்ள தங்க கற்கள் கொள்ளை!!
.jpeg)
16 புரட்டாசி 2025 செவ்வாய் 19:25 | பார்வைகள் : 1968
பரிஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற histoire naturelle அருங்காட்சியகத்தில், கடந்த இரவு மர்மமான கொள்ளையர்கள் நுழைந்து பல தங்கக் கட்டிகளை திருடிச் சென்றுள்ளனர்.
அவர்கள் ஒரு தீவாய்ந்த எந்திரம் (disqueuse) கொண்டு ஒரு பின்புற கதவை வெட்டி, பின்னர் chalumeau கருவி மூலம் மினராலஜி பகுதியில் இருந்த கண்ணாடி vitrine-ஐ உடைத்து, €600,000 மதிப்புள்ள தங்கக் கற்களை கைப்பற்றியுள்ளனர். இந்த திருட்டு செவ்வாய்க்கிழமை காலை ஒரு பணியாளரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு முறைகள் பல வாரங்களாக செயல்படாத நிலையில் திருடர்கள் திட்டமிட்டு வந்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகிய காரணத்தால் அலாரமும் சிசிடிவியும் செயலிழந்திருந்தது. இதனால் முன்பே ஒரு முக்கியமான கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. இப்போது, இந்த சம்பவம் குறித்து கும்பல் கொள்ளைக்கு எதிரான பிரிகேட் விசாரணை நடத்தி வருகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1