கிறிஸ்மஸ் விடுமுறை - பயணச்சிட்டைகள் விற்பனை ஆரம்பம்!!

15 புரட்டாசி 2025 திங்கள் 11:11 | பார்வைகள் : 1825
கிறிஸ்மஸ் விடுமுறைக்கான பயணச்சிட்டைகள் இன்று செப்டம்பர் 15 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின்றன. ஒக்டோபர் 1 ஆம் திகதியின் பின்னரான பயணங்களுக்காக பயணச்சிட்டைகளை முன்பதி செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
Trenitalia மற்றும் Eurostar ஆகிய இரு சர்வதேச சேவைகளுக்கான பயணச்சிட்டைகள் இன்று முதலும், TGV சேவைகளுக்கான பயணச்சிட்டைகள் செப்டம்பர் 17, புதன்கிழமை முதலும் விற்பனைக்கு வருகின்றன.
பரிஸ் - லியோன், பரிஸ் - மார்செய், பரிஸ் - மிலான் நகரங்களுக்கிடையிலான சேவைகளை இத்தாலி நிறுவனமான Trenitalia மேற்கொண்டு வருகிறது. ”டிசம்பர் 14 2025 தொடக்கம் மார்ச் 15, 2026 ஆம் ஆண்டுவரையான” காலப்பகுதிக்கான பயணச்சிட்டைகளையும் அந்நிறுவனம் இன்று ஆரம்பித்துள்ளது.
அதேவேளை, Eurostar நிறுவனம் London, Amsterdam மற்றும் Brussels நகரங்களுக்கான பயணச்சிட்டைகளை ”டிசம்பர் 14 2025 தொடக்கம் பெப்ரவரி 8 2026” காலப்பகுதிகளுக்கான பயணச்சிட்டைகளை இன்று முதல் ஆரம்பிக்கிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1