அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த வடகொரியா

15 புரட்டாசி 2025 திங்கள் 11:25 | பார்வைகள் : 649
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரியும் அந்த நாட்டின் மூத்த அரசியல்வாதியும் ஆன கிம் யோ ஜாங், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார்.
அப்போது அவர், “இந்த ராணுவ பயிற்சி பொறுப்பற்ற அதிகாரங்களில் கூட்டணியால் நடத்தப்படுகிறது. இது எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்” என்றார்.
வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடற்படையினர் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
நாளை முதல் 15 நாட்களுக்கு நடக்க உள்ள இந்த தீவிர போர் பயிற்சியில் முத்தரப்பு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரிய தீபகற்ப கடலில் நடைபெறவுள்ள இந்த ராணுவ பயிற்சிக்கு எதிராக வடகொரியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1