Paristamil Navigation Paristamil advert login

I.S. அமைப்பில் இணைந்த குற்றச்சாட்டு – மூன்று பெண் ஜிகாதிகள் மீது விசாரணைகள் ஆரம்பம்!!!!

I.S. அமைப்பில் இணைந்த குற்றச்சாட்டு – மூன்று பெண் ஜிகாதிகள் மீது விசாரணைகள் ஆரம்பம்!!!!

15 புரட்டாசி 2025 திங்கள் 09:46 | பார்வைகள் : 2833


இஸ்லாமிய ஸ்டேட் (IS) தீவிரவாத அமைப்பில் இணைந்த குற்றச்சாட்டில் மூன்று பிரெஞ்சு பெண்கள் மீது விசாரணை தொடங்கியுள்ளது. 67 வயதான கிரிஸ்டின் அலைன், 42 வயதான மயலென் துஹார்ட் மற்றும் 34 வயதான ஜெனிபர் க்ளைன் ஆகியோர் 2014 முதல் 2017 வரை சிரியாவில் (IS) அமைப்பில் சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் செப்டம்பர் 26 வரை நடைபெற உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூவருக்கும் அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைகள் விதிக்கப்படலாம். மேலும், ஜென்னிபர் க்ளைன் மற்றும் மயலென் துஹார்ட் தங்கள் குழந்தைகளை சிரியாவுக்கு அழைத்துச் சென்று உயிர்–மனநல ஆபத்தில் ஆழ்த்தியதாகவும் தனியே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்