ஜனாதிபதி மக்ரோனின் - முன்னர் எப்போதும் இல்லாத பிரபலத்தன்மை வீழ்ச்சி!!
15 புரட்டாசி 2025 திங்கள் 08:03 | பார்வைகள் : 2730
பிரெஞ்சு ஜனாதிபதிகளில் மிக மோசமான பிரபலத்தன்மையை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அடைந்துள்ளார். அவரது இரண்டாது சுற்று ஜனாதிபதி ஆட்சியில் மிகக்குறைந்த செல்வாக்கு இழப்பை தற்போது சந்தித்துள்ளார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்றில் இது தெரியவந்துள்ளது. மக்ரோன் தற்போது வெறுமனே 17% சதவீதமான மக்களினால் மட்டுமே விரும்பப்படுவதாகவும், அவர் 7 புள்ளிகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2017 ஆம் ஆண்டில் அவர் முதன் முறையாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் அவர் பெறும் மிக குறைந்த செல்வாக்கு இதுவாகும்.
79% சதவீதமானவர்கள் மக்ரோனின் ஆட்சியில் திருப்தி இல்லை எனவும், 4% சதவீதமானவர்கள் கருத்துக்கள் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் ஏனைய 17% சதவீதமானவர்கள் மட்டுமே ஆதரவு தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ipsos நிறுவனம் இந்த கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது. இதில் 18 வயது நிரம்பிய 1,010 பேர் கலந்துகொண்டிருந்தனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan