இந்தியா வரியை குறைக்க வேண்டும்: அமெரிக்க அமைச்சர்

15 புரட்டாசி 2025 திங்கள் 09:25 | பார்வைகள் : 484
இந்தியா வரியை குறைக்க வேண்டும் அல்லது அமெரிக்கா உடன் வர்த்தகம் செய்வதற்கு கடினமான நேரத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என அந்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: நட்பு நாடுகளுடனான உறவு நீடிக்கிறது. அவர்களது பொருட்களை இங்கு வந்து விற்கின்றனர். நம்மிடம் இருந்து சலுகைகளை அனுபவிக்கின்றனர். ஆனால், அவர்களது பொருளாதாரத்தில் நம்மை தடுக்கின்றனர்.
இந்தியா 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. ஆனால், அமெரிக்காவின் ஒரு சோளத்தை கூட வாங்க மாட்டார்கள். அனைத்துக்கும் வரி விதிக்கின்றனர். இதனால் தான், வரியை குறைக்க வேண்டும் என டிரம்ப் கூறுகிறார். எங்களை எப்படி நடத்துகிறீர்களோ, அதேபோல் உங்களை நடத்துவேன் எனக்கூறியுள்ளார்.
நாம் பல ஆண்டுகளாக செய்த தவறை சரிசெய்ய வேண்டும். இதை சரி செய்யும் வரை வேறு வழியில் கட்டணத்தை விதிக்க விரும்புகிறேன். எனவே வரியை குறைக்க வேண்டும். அல்லது உலகின் மிகப்பெரிய நுகர்வோருடன் வணிகம் செய்வதில் உங்களுக்கு பெரிய பிரச்னை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1