Paristamil Navigation Paristamil advert login

50 ஆயிரம் பேர் களித்த நீச்சல் தடாக திருவிழா!!

50 ஆயிரம் பேர் களித்த நீச்சல் தடாக திருவிழா!!

14 புரட்டாசி 2025 ஞாயிறு 16:35 | பார்வைகள் : 3117


Joinville-le-Pont பகுதியில் கோடைக்காலத்தை முன்னிட்டு அமைக்கப்பட்ட la Marne ஆற்றங்கரையில், கடந்த இரண்டு மாதங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீந்தியும், வெயிலில் காய்ந்தும் மகிழ்ந்தனர். 28 வயதான Yousra Adechokan  என்ற இளம் நிர்வாகி இதனை ஒருங்கிணைத்தார். திறந்த முதல் வாரத்திலேயே 7 ஆயிரம் பேர் வந்தனர். குடும்பங்கள், முதியோர்கள், இளைஞர்கள் என அலை மோதிய கூட்டத்தில், சில நாட்களில் நீண்ட வரிசை காணப்பட்டது.

சிறு சிக்கல்கள் இருந்த போதிலும், திட்டம் வெற்றிகரமாக முடிந்தது. சில வயதான பெண்கள் 1970-ம் ஆண்டு தடை விதிக்கப்படும் முன் இங்கு நீந்திய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்ந்தனர். ஒருமுறை விதிமுறையை மீறிய நபர் வெளியேற்றப்பட்டார், மேலும் ஆற்றில் ஏற்பட்ட மாசு காரணமாக ஒரு நாள் முழுவதும் தளம் மூடப்பட்டது. மொத்தத்தில், இந்த ஆற்றங்கரைத் திட்டம் மக்களுக்கு சிறப்பான அனுபவமாக அமைந்தது.

வர்த்தக‌ விளம்பரங்கள்