பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம்.. - இரண்டாவது சிறுவனும் சிக்கினார்!!

14 புரட்டாசி 2025 ஞாயிறு 07:15 | பார்வைகள் : 1967
பயங்கரவாத தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டதாக தெரிவிக்கப்பட்டு அண்மையில் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செப்டம்பர் 8, வியாழக்கிழமை அன்று 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளான். பிரெஞ்சு பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் இத்தவலை வெளியிட்டுள்ளனர். குறித்த சிறுவன் பிரான்சில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும், அதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுவனுடன் இணைந்து இதே திட்டத்தில் இருந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த செப்டம்பர் 1 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தான்.
தற்போது இருவரும் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் விரைவில் நிதிமன்ற விசாரணைகளுக்கு அழைக்கப்பட உள்ளனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1