Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவுக்கு வரி விதித்து விரிசலுக்கு வழிவகுத்தேன்: பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார் டிரம்ப்

இந்தியாவுக்கு வரி விதித்து விரிசலுக்கு வழிவகுத்தேன்: பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார் டிரம்ப்

13 புரட்டாசி 2025 சனி 05:49 | பார்வைகள் : 586


இந்தியாவுக்கு வரி விதிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மிகவும் பெரிய விஷயம். இப்படி வரி விதித்தது, இந்தியா உடனான உறவில் விரிசல் ஏற்படுத்தியுள்ளது,'' என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: இந்தியா தான் ரஷ்யாவின் மிகப்பெரிய வாடிக்கையாளராக இருந்தது. அவர்கள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது 50 சதவீத வரி விதித்தேன். அது எளிதான காரியம் அல்ல. மிகவும் பெரிய விஷயம். இந்தியா உடனான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. நான் அமெரிக்காவின் நலனுக்காக தான் நிறைய செய்துள்ளேன்.

இது நமது பிரச்னையை விட ஐரோப்பாவின் பிரச்னை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 7 உலகளாவிய மோதலை தீர்த்து வைத்துள்ளேன். சில தீர்க்க முடியாத மோதலை தீர்த்து வைத்து உள்ளேன். காங்கோ மற்றும் ருவாண்டா இடையே 31 ஆண்டுகளாக நடந்து வந்த போரை தீர்த்து வைத்துள்ளேன். இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்