பயங்கரவாத குழுவில் சேர்ந்த சிறுவன் நீதிமன்ற கண்காணிப்பில்!!!

12 புரட்டாசி 2025 வெள்ளி 18:22 | பார்வைகள் : 1737
Sarthe மற்றும் பிரான்ஸின் பல பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு சிறுவர்கள் செப்டம்பர் 8ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். இவர்களில் 16 வயதுடைய ஒருவருக்கு, பயங்கரவாத குற்றவாளிகள் குழுவில் சேர்ந்ததாகவும், ஒருவர் அல்லது பலருக்கு எதிராக குற்றம் திட்டமிட்டதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கட்டாயம் நீதிமன்ற கண்காணிப்பில் வைத்து, சிறப்பு பராமரிப்பு அமைப்பில் தங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு சிறுவனின் காவல் நீக்கப்பட்டுள்ளது, தற்போதைக்கு வழக்குத் தொடரப்படவில்லை. இதே வழக்கில் Sartheதை சேர்ந்த 17 வயதுடைய இன்னொரு சிறுவனும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சார்திலும் பரிஸிலும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படுகிறார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1