பரிஸ் : கத்திக்குத்து தாக்குதல்! - ஆயுததாரி தலைமறைவு!!
12 புரட்டாசி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 2869
பரிஸ் 7 ஆம் வட்டாரத்தில் கத்திக்குத்து தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆயுததாரி தப்பி ஓடியுள்ளார்.
செப்டம்பர் 12 ஆம் திகதி நேற்று வியாழக்கிழமை இரவு 9 மணி அளவில் இச்சம்பவம் Place de Breteuil பகுதியில் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கானதாக அவசரப்பிரிவுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர். அங்கு படுகாயமடைந்திருந்த குறித்த நபருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்து மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
தாக்குதல் மேற்கொண்ட ஆயுத்தாரி சம்பவ இடத்தில் இருந்து ஓடித்தப்பி தலைமறைவாகியுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான நபர் 51 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
"குற்றவாளியை விரைவில் கண்டுபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன." என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan