நீச்சல் பயிற்சியின்போது அதிர்ச்சி – மூழ்கிய நிலையில் சிறுவன் மீட்பு!!
11 புரட்டாசி 2025 வியாழன் 20:01 | பார்வைகள் : 3495
பாரிஸ் நகரின் 20வது வட்டாரத்தில் அமைந்துள்ள Georges Vallerey நீச்சல் குளத்தில், இன்று (11/09/2025) பள்ளிக்கூடத்திற்குப் புறம்பாக நடைபெற்ற நீச்சல் வகுப்பின்போது 9 வயது சிறுவன் திடீரென நீரில் மூழ்கி மயக்கமடைந்தார். உடனடியாக நீச்சல் காப்பாளர்களும் அவசர சேவையினரும் அவரை மீட்டு இதய - சுவாசம் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை அளித்தனர். விரைவான உயிர்ப்பிக்கும் நடவடிக்கையால் சிறுவனின் இதய துடிப்பு மீண்டும் செயல்பட்டு, அவசரமாக Robert-Debré மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் தற்போது சிறுவனின் உயிருக்கு ஆபத்து இல்லை என அறிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேயர் எரிக் ப்ளியெஸ் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்ததோடு, “சிறுவன் திடீரென மயக்கம் அடைந்து நீரில் விழுந்திருக்கலாம், மீட்பு குழுவினர் விதிமுறைகளுக்கு ஏற்ப உடனடியாக செயல்பட்டுள்ளனர்” எனவும் கூறினார். இச்சம்பவத்துடன் தொடர்பாக இருந்த இரண்டு நீச்சல் பயிற்சியாளர்களிடம் காவல்துறையினர் விளக்கம் கேட்டுள்ளனர். கடந்த ஆண்டு இதேபோன்ற நீச்சல் குள விபத்தில் 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan