இடைத்தரகர்கள் அகற்றப்படுவார்கள்: இபிஎஸ் வாக்குறுதி
12 புரட்டாசி 2025 வெள்ளி 07:38 | பார்வைகள் : 668
அதிமுக ஆட்சியில் இடைத்தரகர்கள் அகற்றப்படுவார்கள், என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
மடத்துக்குளத்தில் எழுச்சிப்பயணத்தை முடித்துவிட்டு தாராபுரம் சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கொண்டரசம்பாளையத்தில் செங்காந்தள் பூ விவசாயிகள் பெரும் வரவேற்பு கொடுத்தனர். பஸ்ஸை நிறுத்திய இபிஎஸ் கீழே இறங்கி அவர்களிடம் பேசினார்.
தாராபுரம் கொண்டரசம்பாளையத்தில் செங்காந்தள் பூ விவசாயிகளை அவர் சந்தித்தார். அப்போது, விவசாயிகள்,“செங்காந்தள் பூ , அதிமுக ஆட்சி இருந்தபோது ஒரு கிலோ 3600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால், இப்போது 800 ரூபாய்க்குத்தான் போகிறது. இடைத்தரகர்கள் எங்களிடம் ரூ.800 ரூபாய்க்கு வாங்கி, ரூ.4600 ரூபாய்க்கு விற்கிறார்கள். எங்களுக்கு தனியாக நலவாரியம் அமைத்து, அரசே விலை நிர்ணயம் செய்துகொடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.
இதன் பிறகு இபிஎஸ் கூறியதாவது: அதிமுக ஆட்சி அமைந்ததும் உங்கள் கோரிக்கை நிறைவேறும். அரசிடம் இருக்கும் மார்க்கெட் கமிட்டி மூலம் விதைகளை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கிறேன். அதன்பின், வியாபாரிகள் தடையில்லாமல் வருவார்கள். வெளிமாநில வியாபாரிகள் இங்கு வந்து வாங்க முடியாத அளவுக்கு இடைத்தரகர்கள் ஆதிக்கம் இருக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்த இடையூறுகள் எல்லாம் கலையப்பட்டு, நல்ல விலைக்கு மார்க்கெட் கமிட்டியிலேயே விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan