சீனாவில் கைத்தொலைபேசி வெடிப்பு - சிறுவன் காயம்

9 புரட்டாசி 2025 செவ்வாய் 18:12 | பார்வைகள் : 661
சீனாவில் Xiaomi Mi 13 கைத்தொலைபேசி ஒன்று திடீரென வெடித்ததில் 3 வயதுச் சிறுவன் காயமடைந்தான்.
சிறுவனின் கைகளிலும் கால்களிலும் தீப்புண் காயங்கள் ஏற்பட்டன.
தோலும் கருகியதாக 8World கூறுகிறது. சிறுவன் கைத்தொலைபேசியில் விளையாடிக்கொண்டிருந்தபோது அது வெடித்ததாக கூறப்படுகின்றது.
சம்பவத்தை அடுத்துச் சிறுவனின் உறவினர்கள் Xiaomi கைத்தொலைபேசி நிறுவனத்தைத் தொடர்புகொண்டுள்ளனர்.
சிதைந்த கைத்தொலைபேசியின் பாகங்களை விசாரணைக்காக எடுத்துக்கொள்வதாக நிறுவனம் கூறியதாக அந்த தகவ்ல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1