துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!
10 புரட்டாசி 2025 புதன் 04:15 | பார்வைகள் : 2583
இன்று நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் 452 ஓட்டுகள் பெற்றுஅமோக வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.
நாட்டின், 14வது துணை ஜனாதிபதியாக, 2022 ஆகஸ்டில் பதவியேற்ற ஜக்தீப் தன்கர், 74, உடல்நிலையை காரணம் காட்டி, ஜூலை 21ல் ராஜினாமா செய்தார். இதையடுத்து, 15வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க இன்று( செப்., 9) தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில், மத்தியில் ஆளும் தேஜ கூட்டணியின் வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்தவரும், மஹாராஷ்டிரா மாநில கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்.
எதிர்க்கட்சியான இண்டி கூட்டணி சார்பில், தெலுங்கானாவைச் சேர்ந்தவரும், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான சுதர்ஷன் ரெட்டி களமிறக்கப்பட்டார்.
இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடந்தது. முதல் நபராக பிரதமர் மோடி தனது ஓட்டை பதிவு செய்தார். பிறகு அனைத்து மத்திய அமைச்சர்கள், தேஜ கூட்டணி எம்பிக்கள், சோனியா, ராகுல், வாத்ரா, கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் இண்டி கூட்டணி கட்சி எம்பிக்களும் தங்களது ஓட்டினை பதிவு செய்தனர். இந்த தேர்தலை பாரதிய ராஷ்ட்ரீய சமிதி, பிஜூ ஜனதா தளம் மற்றும் அகாலிதளம் ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.
தேர்தல் முடிவடைந்த சிறிது நேரத்தில், ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில், தேஜ கூட்டணி சார்பில் களமிறங்கிய சி.பி.ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி பெற்றார். அவருக்கு ஆதரவாக 452 ஓட்டுகள் பதிவாகின.
துணை ஜனாதிபதியாக தேர்வான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்னர் தமிழகத்தைச் சேர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் துணை ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan