மக்ரோன் பதவிவிலக வேண்டும்! - வலுக்கும் கோரிக்கைகள்!!

8 புரட்டாசி 2025 திங்கள் 20:25 | பார்வைகள் : 3471
ஒன்பது மாதகால சேவையில் இருந்த பிரதமர் பிரான்சுவா பெய்ரூ தூக்கி வீசப்பட்டதை அடுத்து, ஜனாதிபதி மக்ரோன் பதவி விலக வேண்டும் எனும் கோரிக்கை வலுத்துள்ளது.
‘எட்டு ஆண்டுகளாக ஜனாதிபதி மக்ரோன் இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறார். மக்களின் வாழ்க்கையை அவர் அனுபவித்து வாழ விடவில்லை - நீங்கள் இந்த நாட்டுக்கு மிகவும் ஆபத்தானவர்!” என Val-de-Marne மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் Mathilde Panot கடுமையாக சாடினார். அத்தோடு மக்ரோன் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
“வரவுசெலவுத்திட்டத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் ஒருபோதும் இவ்வளவு குழப்பம் எழுந்ததில்லை. பெரும் நிறுவனங்களிடம் வரவுசெலவுத்திட்டத்தை தாரை வார்க்கும் அளவு அடிமையாகிவிட்டோம்!” எனவும் அவர் பொழிந்து தள்ளினார்.
பதவி விலகலுக்கு ஆதரவாக வாக்களித்த பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்ரோனை பதவி விலகுமாறு அழைத்துள்ளனர்.
குறிப்பாக Jean-Luc Mélenchon தெரிவிக்கையில், பிரதமர் பெய்ரூ போன்று மக்ரோனும் பதவி விலகவேண்டும் எனும் பொருட்படும் வகையில், “வெளியே நடக்கவேண்டும்!” எனும் வார்த்தைகளை பயன்படுத்தி கருத்து தெரிவித்துள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1