364 வாக்குகள் பதிவு! - வெளியேறுகிறார் பிரான்சுவா பெய்ரூ!!

8 புரட்டாசி 2025 திங்கள் 19:25 | பார்வைகள் : 2268
சற்று முன்னர் பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில், பிரதமர் பிரான்சுவா பெய்ரூவுக்கு எதிராக 364 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் பிரதமர் பதவி விலக உள்ளார்.
பாராளுமன்றத்தில் 589 உறுப்பினர்கள் உள்ள நிலையில், அவர்களில் 558 பேர் வாக்களிப்பில் ஈடுபட்டனர். 15 பேர் சமூகளிக்கவில்லை. ஏனையோர் வாக்களிகவில்லை. வாக்களித்த 558 உறுப்பினரில் 194 பேர் பிரமர் மீது நம்பிக்கை ஆதரவு வாக்கும், 364 பேர் நம்பிக்கை எதிர்ப்பு வாக்கும் பதிவு செய்தனர்.
இதனால் பிரதமர் பிரான்சுவா பெய்ரூ, பிரதமர் பதவியில் இருந்து விலக உள்ளார். அரசியலமைப்புச் சட்ட வரைவு 50 இன் கீழ் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பிரதமர் ஜனாதிபதியிடம் பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1