நான் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தேன்! - பிரதமர் பெய்ரூ!!

7 புரட்டாசி 2025 ஞாயிறு 12:50 | பார்வைகள் : 1871
பதவியில் இருந்து விலகுவது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை எனவும், நான் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்துள்ளேன் எனவும் பிரதமர் பிரான்சுவா பெய்ரூ தெரிவித்துள்ளார்.
நாளை திங்கட்கிழமை பிரதமர் மீதான நம்பிக்கை பிரேரணை கொண்டுவரப்பட உள்ளது. அரசாங்கம் கவிழ்க்கப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இதனை பிரதமர் பெய்ரூ தெரிவித்தார்.
“இதில் கவலையடைய எதுவும் இல்லை. ஒரு அரசாங்கத்தின் தலைவராக இருந்து அந்த அரசாங்கம் தூக்கியெறியப்படுவதை விடவும் வாழ்க்கையில் மோசமான விஷயங்கள் உள்ளன” என தெரிவித்த பெய்ரூ, "முதலைக் கண்ணீர் வடிக்கப் போகும் ஒருவருடன் நீங்கள் இருப்பதாக நினைத்தால், நீங்கள் தவறான நபரிடம் பேசுகிறீர்கள்." எனவும் தெரிவித்தார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1