முகத்தில் துப்பி, கைபேசியை அழித்த காவல்துறை அதிகாரி மீது விசாரணை!!

6 புரட்டாசி 2025 சனி 20:10 | பார்வைகள் : 3343
Seine-Saint-Denisஇல் ஒரு குடியிருப்பின் ஜன்னலிலிருந்து படம் பிடிக்கப்பட்ட வீடியோவில், ஒரு காவல்துறை அதிகாரி ஒரு இளைஞரின் முகத்தில் துப்பி, அவரை அடித்து, கைபேசியை தரையில் வீசுவது காணப்படுகிறது.
அந்த இளைஞர் எந்தவித எதிர்ப்பும் காட்டவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி மக்களின் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. IGPN (காவல்துறைக் கண்காணிப்பு அமைப்பு) இந்த வழக்கை கையாளத் தொடங்கியுள்ளது, Bobigny நீதிமன்றமும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்தக் காட்சியை சோனியா என்ற அண்டைவீட்டுக்காரி வீடியோவில் பதிவு செய்துள்ளார். அவரின் கூற்றுப்படி, காவலர் வந்ததிலிருந்தே கோபத்தில் இருந்துள்ளார் மற்றும் இளைஞர்கள் ஒரு எதிர்வினை கொடுப்பார்கள் எனக் காத்திருந்துள்ளார்.
எம்.பி அலி தியுவரா இந்த வீடியோவை வெளியிட்டு, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டுள்ளார். இளைஞர் இதுவரை எந்த புகாரும் அளிக்கவில்லை, ஆனால் இந்த சம்பவம் காவல்துறையின் ஒழுக்கத்தைப் பற்றி கேள்விகளை எழுப்புகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1